மிருதுவான மற்றும் மென்மையான கூந்தலை பெற வேண்டுமா?? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!!

0

அழகான கூந்தலை யாருக்குத்தான் பிடிக்காது. அனைவருமே நீளமான, கருமையான கூந்தல் வேண்டும் என்று நினைப்பார்கள். சிலருக்கு கூந்தல் அதிகமாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்காது வறட்சியாக கலை இழந்து காணப்படும். அவர்களுக்காக ஒரு சூப்பரான ஹேர்மாஸ்க் எப்படி வீட்டிலையே தயார் செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

கருஞ்சீரகம்:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கூந்தல் வளர்ச்சியில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகம் முடி உதிர்வதை தடுத்து நீளமான கூந்தல் வளர்வதற்கு உதவுகிறது. யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரகம் பயன்படுத்தபடுகிறது. முடியின் வேர்கால்களுக்கு ஊட்டம் கொடுக்கிறது. முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை கொடுக்கிறது.

வெந்தயம்:

வெந்தயம் குளிர்ச்சி தன்மை கொண்டவை. கூந்தலை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. கூந்தலுக்கும், சருமத்திற்கும் வெந்தயம் பல நன்மைகளை கொடுக்கிறது. வெந்தயத்தை சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்காக உணவில் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெய்:

விளக்கெண்ணெய் அதிக பிசுபிசுப்பு தன்மை கொண்டவை. அதனால், வறட்சியான கூந்தலை உடையவர்கள் விளக்கெண்ணெய் பயன்படுத்தும் பொழுது கூந்தலை வறட்சி இல்லாமல் பாதுகாப்பாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. கூந்தலை கருமையாகவும் வைத்திருக்கும்.

தயிர்:

தலையில் உள்ள அரிப்பு, பொடுகு போன்றவற்றை நீக்க கூடியது. உடலில் உள்ள சூட்டை தணிக்கும். நாம் தயாரிக்கும் அனைத்து ஹேர்மாஸ்க்களிலும் தயிரை பயன்படுத்தலாம். தயிரில் பூஞ்சை எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நிரந்தரமாக மறைந்துவிடும்.

ஹேர்மாஸ்க்:

தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம் – 2 ஸ்பூன், வெந்தயம் – 2 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன், தயிர் – 3 ஸ்பூன். முதலில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை பொடியாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தயிர் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து முடியின் வேர்க்கால்கள், நுனிபாகம் ஆகியவற்றில் தேய்த்து அரைமணிநேரம் கழித்து அலசினால் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here