Wednesday, April 24, 2024

உங்களது வங்கிக்கணக்கிற்கு ரூ.2000 வந்துருச்சா?? பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம்!!

Must Read

பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பணம் இந்த மாதம் 1 ஆம் தேதி இருந்து விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம்:

பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் மூலமாக நலிவடைந்த விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று தவணையாக 6000 ரூபாய் நிதி உதவி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்தில் பயிரிட கூடிய விவசாய நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாட்டில் உள்ள விவசாயிகள் அதிகமாக அவதிப்பட்டு வந்ததால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் விரைவாக பணம் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படியில் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள பணம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக டிசம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இணைய வேண்டும்??

இந்த திட்டத்தின் கீழ் பல விவசாயிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றனர். விவசாயிகள் சில சான்றிதழ்களை சமர்ப்பித்தால் இந்த திட்டம் மூலமாக பயன் பெறலாம். விவசாயிகள் நேரடியாக மாநில அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைக்கும் நோடல் அதிகரியினை சந்தித்து, பொது சேவை மையங்களில் பதிவு செய்து இந்த திட்டத்தில் சேரலாம். அப்படி இல்லையென்றால், ஆன்லைன் வாயிலாக கூட விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் பிரதமர் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குள் செல்ல வேண்டும்.
  • அதில் farmers corner என்று ஒரு விருப்பம் இருக்கும், அதனை தேர்வு செய்ய வேண்டும்.
  • இதில் விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின், ஆதார் கார்டு, குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன தன் வங்கி கணக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களையும் வழங்க வேண்டும்.
  • இதில் விவசாயிகள் தங்களது பணம் பற்றி விவரங்களை கூட தெரிந்து கொள்ளலாம்.

அப்படி பணம் வந்து சேரவில்லை என்றால், அரசின் ஹெல்ப்லைன் நம்பர்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம். அரசின் ஹெல்ப்லைன் நம்பர்கள், பிஎம் கிசான் டோல் ஃப்ரீ நம்பர்: 18001155266, பிஎம் கிசான் ஹெல்ப் லைன் நம்பர்: 155261, பிஎம் கிசான் லேண்ட் லைன் நம்பர்: 011-23381092, 23382401, பிஎம் கிசான் புதிய உதவி எண்: 011-24300606.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -