ஒரே மாதத்தில் முடி உதிர்வை தடுத்து நிறுத்த வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

0
hair oil

முடி உதிர்தல் பிரச்சனை தற்போது அதிகளவில் இளைய தலைமுறையினருக்கு இருக்கும் பிரச்சனை ஆக மாறிவிட்டது. இந்த முடி உதிர்வை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் நாளடைவில் வழுக்கை விழும் அளவிற்கு வந்துவிடும். ஆரம்ப காலகட்டத்திலேயே இதனை பார்த்து சரி செய்து விட்டால் தலைமுடி உதிர்வை தடுக்கலாம். இப்பொழுது தலைமுடி உதிர்வை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

முடி உதிர்வை தடுக்க

இந்த காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதே இல்லை. ஏனென்றால் முகத்தில் எண்ணெய் வடியும், ஸ்டைல் என பல காரணங்களை சொல்லுவர். இதனால் முடிகளில் வறட்சி ஏற்பட்டு முடி உதிர்வுக்கு காரணமாகிறது. மேலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருந்தால் உடலுக்கும் பல உபாதைகளை ஏற்படுத்தி விடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

hair-fall

தலையில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாகவே முகத்திலும் பருக்கள், கருமை போன்றவை ஏற்படுகிறது. இதனால் உடல் சூடும் அதிகரித்து உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ள பொருட்களை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். மேலும் தினமும் ஒரு கேரட், கருவேப்பிலை போன்றவற்றை உணவில் எடுத்து வந்தால் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உடல் சூட்டுக்கு வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கலாம்.

hair-fall

மேலும் சாதாரண தேங்காய் என்னை மட்டும் பயன்படுத்துவதை விட்டு மூலிகை எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை இரவில் தேய்த்து விட்டு படுத்து காலையில் தலைக்கு குளிக்கலாம். இப்பொழுது இந்த எண்ணெயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

Hair-Spa
Hair-Spa

தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காய்

தான்றிக்காய் பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

வெட்டி வேர்

ரோஜா இதழ்

சந்தன பொடி

கருவேப்பிலை

வேப்பிலை

செய்முறை

முதலில் தேங்காய் எண்ணெயை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்க வேண்டும். அதில் நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். அதன் பின் கருவேப்பிலை, தான்றிக்காய் பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ், வேப்பிலை போன்றவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதனை நாம் எந்த தட்பவெட்ப காலத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Best-Oils-for-Hair-Growth_
Best-Oils-for-Hair-Growth_

இந்த எண்ணெயை வடிகட்டி அதனை வெயிலில் அரைமணி நேரம் வைத்து பயன்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் இந்த எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகள் முழுவதுமாக நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here