காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் – கேரள முதல்வர் அசத்தல்!!

0
pinarayi-vijayan
pinarayi-vijayan

காய்கறிகளின் உற்பத்தி பெருகி விலை குறைவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதை சரி செய்ய, கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்துள்ளது. இது, உற்பத்தி விலையை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சந்தை விலை குறைந்தாலும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் மாற்றம் இருக்காது. இதன் மூலம், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்த முதல் மாநிலமானது கேரளா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

vegetables-and-fruits-farmers-market
vegetables

ஒருங்கிணைத்தல், விநியோக பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட உள்ளன. காய்கறிகள் குளிரூட்டுதல், போக்குவரத்து வசதியும் செய்து தரப்படும். இதற்காக, விவசாயிகள் வேளாண்மை துறையில் பதிவு செய்ய வேண்டும். இத்திட்டம் வரும் நவம்பர் 1ல் துவங்குகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் நிம்மதி பெறுவர். மாநிலத்தில் விவசாயித்தை பெருக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்”. என்றார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

முதற்கட்டமாக 16 காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (ஒரு கிலோ) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்: வெண்டைக்காய் மற்றும் உருளைக் கிழங்கு ரூ.20, கேரட் மற்றும் பீட்ரூட் ரூ.21, பீன்ஸ் ரூ.28, புடலங்காய், தக்காளி ரூ.8, வெள்ளரி ரூ.8, சாம்பல் பூசணி ரூ.9, முட்டை கோஸ் ரூ.11, மரவள்ளிக்கிழங்கு ரூ.12, அன்னாசி ரூ.15, நேந்திரம் மற்றும் பாகற்காய் ரூ.30, சரம் பீன்ஸ் ரூ.34,பூண்டு ரூ.139 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here