நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘முருங்கை பூ பாயாசம்’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
drumstick flower payasam

நாம இப்போ பாக்க போறது ரொம்பவே வித்தியாசமான முருங்கை பூ பாயாசம். என்னடா இது முருங்கை பூவுல பாயாசமானு யோசிக்கிறீங்களா!! ஆமாங்க ரொம்ப சிம்பிளா ஹெல்த்தியா இத செஞ்சு முடிச்சிரலாம். முருங்கை பூவுல இரும்புச்சத்து ரொம்பவே அதிகமா இருக்கு. நம்ம ஹேர் க்ரோத் ரொம்பவே நல்லா இருக்கும். முக்கியமா ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்னு சொல்றாங்க. நம்ம ஸ்கின் நல்லா க்ளோவ் ஆகுங்க. இப்போ இந்த முருங்கை பூ பாயசம் எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள் 

drumstick payasam

முருங்கை பூ – 50 kg

பால் – 250 ml

பாதாம் – 20 g

முந்திரி – 20 g

உலர் திராட்சை – 10 g

ஏலக்காய் – 4

நெய் – தேவையான அளவு

பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாய்ல நெய் விட்டு மிதமான சூட்ல முருங்கை பூ பொன்னிறமா வறுத்து எடுத்து பொடி பண்ணி வச்சுக்கோங்க. அப்புறம் பாதாம், முந்திரி, உலர் திராட்சை எல்லாம் வறுத்து தனியா அரைச்சு எடுத்துக்கோங்க. இப்போ ஒரு பாத்திரத்துல பாலை நல்லா கொதிக்க வச்சு அதுல முருங்கை பூ பொடியை போட்டு நல்லா காச்சணும்.

அஞ்சு நிமிசம் கழிச்சு பாதாம், திராட்ச்சை, முந்திரி பவுடர் சேர்த்துட்டு, ஏலக்காய் பணங்கற்கண்டு தேவையான அளவு போட்டு சிம்ல வச்சு கிளரிகிட்டே இருக்கணும். நல்ல மணம் வந்தவுடன் ஸ்டவ் ஆப் பண்ணிடுங்க. இப்போ கம கம முருங்கை பூ பாயசம் ரெடி. இனி உங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் குடுத்து அசத்துங்க. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here