இந்த தவறை மட்டும் ஒருநாளும் பண்ணிடாதீங்க – அப்பறம் வாழ்க்கை முழுக்க வழுக்கை தான்!!

0

முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுதலை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் சில விஷயங்களை தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதனை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

முடி உதிர்வு

பெண்களில் இருந்து ஆண்கள் வரை தற்போது தங்களது முடியை பராமரிப்பதில் ஒழுங்காக கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில் மாறி வரும் சூழ்நிலையால் வேலை வேலை என்றே ஓடிக்கொண்டுள்ளனர். மேலும் உணவு பழக்கமுறையும் தற்போது மாறி வருகிறது. கண்ட இடங்களில் விற்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுவது, மேல்நாட்டு நாகரீகம் என்ற பெயரில் துரித உணவுகளை சாப்பிடுவது. இரவில் தூக்கமின்மை என பல செயல்களால் பாதிக்கப்படுவது என்னவோ நமது உடல் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நமது தலை முடிகளும் இதனால் பாதிக்கப்படுகிறது. சாப்பிடுவதற்கு தலைமுடி பிரச்சனைகளுக்கு என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நாம் உண்ணும் உணவிற்கும் நமது தலைமுடிக்கும் சம்மந்தம் உள்ளது. ஏனெனில் உடலில் அதிகப்படியான சூடு அதிகரிக்கும் போது முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும். நமது உணவு பழக்கமும் உடலில் அதிகரிக்கும் வெப்பநிலைக்கு முக்கிய காரணம்.

  • அதனால் தான் சாத்தான் உணவுகளை தினமும் எடுத்து கொள்வது மிகவும் அவசியமாகும். இரும்பு சத்துக்கள் நிறைந்த கீரைகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தலை முடியை பராமரிக்க சில செய்கைகளை தவிர்ப்பது நல்லது.
  • சிலர் தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பர். அவர்கள் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூ உபயோகிப்பதால் முடி வலுவிழந்து போய்விடும். எனவே வாரத்திற்கு 2 முறை தலைக்கு குளித்தால் போதுமானது.

சித்ராவை போலவே போஸ் கொடுத்து ரசிகர்களை கண்கலங்க வைத்த காவியா – வைரலாகும் புகைப்படம்!!

  • கடையில் கிடைக்கும் கண்ட பொருட்களை உடனே வாங்கி பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான ஒரு செயலாகும். அதுவும் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை நேரடியாக தலையில் தேய்த்து குளிப்பது முடியை பலவீனமாக்கும்.
  • அடுத்ததாக தலைக்கு குளித்த உடன் அந்த ஈரத்தோடு முடியை சீவ கூடாது. அப்பொழுது தான் முடி அதிக அளவு கொட்டும்.
  • தலைக்கு குளித்தவுடன் தலை முடியை துவட்ட கூடாது. டவலை வைத்து முடியை துடைக்க மட்டுமே செய்ய வேண்டும்.
  • மேலும் ஷாம்பூ போட்டவுடன் கான்டிஷ்னரை பயன்படுத்துவதால் தான் முடி அதிகளவு கொட்டுகிறது. முடிந்த அளவிற்கு இயற்கையான முறையிலேயே சிகைக்காய் போன்றவற்றை பயன்படுத்தினால் முடி மேலும் வலிமையடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here