சித்ராவை போலவே போஸ் கொடுத்து ரசிகர்களை கண்கலங்க வைத்த காவியா – வைரலாகும் புகைப்படம்!!

0

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவியா மறைந்த சித்ராவை போலவே அப்படியே போஸ் கொடுத்துள்ளார். இது சித்ராவை நியாபகப்படுத்தினாலும் பலரும் காவியாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானது. அதிலும் கதிர், முல்லை ஜோடி தான் பிரபலமானது.

நன்றாக ஓடிக்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென திருப்பம் ஏற்படும் வகையில் முல்லையாக நடித்து வந்த சித்ரா திடீரென மரணமடைந்தார். இது பலரையும் சோகமாக்கியது. சித்ரா இல்லாத முல்லை கதாபாத்திரம் தங்களுக்கு தேவையில்லை என்ற அளவுக்கு ரசிகர்கள் விரக்தியானார்கள்.

அடுத்து அந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை காவியா நடிக்க வந்தார். ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் வந்தாலும் தற்போது அவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். கதிர் முல்லை ரொமான்ஸ் சீன் முன்பை விட அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.

அப்படி இருக்க தற்போது காவியா தனது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது மறைந்த நடிகை சித்ராவை போலவே போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here