மே 26 ஆம் தேதி ‘அடியே’ பாடல் ரிலீஸ்…,படக்குழு அறிவிப்பு….,

0
மே 26 ஆம் தேதி 'அடியே' பாடல் ரிலீஸ்...,படக்குழு அறிவிப்பு....,
மே 26 ஆம் தேதி 'அடியே' பாடல் ரிலீஸ்...,படக்குழு அறிவிப்பு....,

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ‘பேச்சிலர்’ திரைப்படத்திற்குப் பிறகு தற்போது ‘அடியே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதியின் ’96’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை கௌரி கிஷன் இந்த படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்கான போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றிருந்தது.

ஜூன் மாதத்தில் ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழா…,கமல்ஹாசன் பங்கேற்பு….,

இந்த நிலையில், விரைவில் வெளியாக இருக்கும் ‘அடியே’ திரைப்படத்திற்கான பாடல் மே 26 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள ‘வா செந்தாழினி’ பாடல் மே 26 ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here