ஜூன் மாதத்தில் ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழா…,கமல்ஹாசன் பங்கேற்பு….,

0
ஜூன் மாதத்தில் 'மாமன்னன்' இசை வெளியீட்டு விழா...,கமல்ஹாசன் பங்கேற்பு....,
ஜூன் மாதத்தில் 'மாமன்னன்' இசை வெளியீட்டு விழா...,கமல்ஹாசன் பங்கேற்பு....,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த திரைப்படத்தில், உதயநிதி உடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு ‘ராசாகண்ணு’ என்று துவங்கும் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

‘அந்த சத்தம் என் காதுல கேட்டுட்டே இருக்கு’….,நெகிழ்ச்சியில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்…,

இதற்கிடையில், விரைவில் வெளியாக இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடிகர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும், அதில் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here