‘அந்த சத்தம் என் காதுல கேட்டுட்டே இருக்கு’….,நெகிழ்ச்சியில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்…,

0
'அந்த சத்தம் என் காதுல கேட்டுட்டே இருக்கு'....,நெகிழ்ச்சியில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்...,
'அந்த சத்தம் என் காதுல கேட்டுட்டே இருக்கு'....,நெகிழ்ச்சியில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்...,

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் என்றாலே தமிழ் மக்கள் பலருக்கும் நினைவு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தல தோனி தான். தமிழகத்தை குறிப்பாக, சென்னையை மையமாகக் கொண்டு IPL போட்டிகளில் விளையாடும் CSK அணிக்கு மக்கள் ஏகபோக ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்த அன்பை, கிரிக்கெட் மைதானங்களில் ஒவ்வொரு முறை சென்னை அணி விளையாடும் போதும் பார்க்க முடிகிறது.

அதிலும் குறிப்பாக, சென்னை அணியின் கேப்டன் தல தோனி மைதானத்திற்குள் நுழையும் போது பறக்கும் விசில் சத்தங்கள் மற்றும் பின்னால் இருந்து ஒலிக்கப்படும் இசை ஆகியவை ரசிகர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி….,பஞ்சாப் அரசு அறிவிப்பு….,

அந்த வகையில், நேற்று நடைபெற்ற போட்டியில் தோனி மைதானத்திற்குள் நுழையும் போது தொனித்த இசை குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, ‘ஒட்டுமொத்த அரங்கும் அதிரும் போது, பின்னணியில் நமது குரல் வரும் போது… நேரில் இருந்து கத்தி இருந்தாலும் இந்த சந்தோசம் கிடைக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here