நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…LSG யை பதம் பார்த்த மும்பை – அடுத்த சுற்றுக்கு தகுதி….,

0
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...LSG யை பதம் பார்த்த மும்பை - அடுத்த சுற்றுக்கு தகுதி....,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...LSG யை பதம் பார்த்த மும்பை - அடுத்த சுற்றுக்கு தகுதி....,

இன்று நடைபெற்று முடிவடைந்த எலிமினேட்டர் சுற்றின் 2 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக விளையாடி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை தோற்கடித்துள்ளது. நடப்பு IPL தொடரில் 3 மற்றும் 4 ஆவது இடத்தில் இடம் பெற்றிருந்த இவ்விரு அணிகளும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலாவது பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அந்த வகையில் மும்பை அணியின் இஷான் கிஷான் (15), ரோஹித் ஷர்மா (11), கிரீன் (41), சூர்யகுமார் யாதவ் (33), திலக் வர்மா (26), டிம் டேவிட் (13,) வதேரா (23), கிறிஸ் ஜோர்தான் (4) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அந்த வகையில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இப்போது, மும்பை அணி நிர்ணயித்த 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

ஜூன் மாதத்தில் ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழா…,கமல்ஹாசன் பங்கேற்பு….,

அந்த வகையில் கைல் மேயர்ஸ் (18), மன்கட் (3), க்ருனால் பாண்ட்யா (8), மார்கஸ் ஸ்டோனிஸ் (40), ஆயுஷ் பதோனி (1), நிகோலஸ் பூரன் (0), தீபக் ஹூடா (15), கிருஷ்ணப்பா கவுதம் (2), ரவி பிஷ்னோய் (3), நவீன் உல் ஹக் (1) ஆகியோரது பங்களிப்பு மூலம் லக்னோ அணி 16.3 ஓவர் முடிவில் 101 ரன்களை எடுத்தது. இப்போது, 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி குவாலிபையர் சுற்றின் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here