ரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மாவா?? குழப்பத்தை ஏற்படுத்திய கூகிள்!!

0
rashid-khan-and-anushka-sharma-83
rashid-khan-and-anushka-sharma-83

நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெரும் ஒரே இடம் என்றால் அது கூகுள் தான். ஆனால் அந்த கூகுளே தற்போது சில கேள்விகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய பதில்களை அளித்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ரஷீத் கான் மற்றும் அனுஷ்கா சர்மா குறித்து கூகுள் வெளியிட்ட தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூகிள்

உலகில் இருக்கும் அனைத்து தகவல்களும் அடங்கி இருப்பது கூகுளில் தான். இருந்த இடத்திலேயே ஒரு விஷயத்தை கூகிள் மூலம் எளிமையாக தேடி கண்டறியலாம். ஆனால் தற்போதோ கூகிள் குழப்பமான வகையில் பதிலளித்து வருகிறது. அதாவது ‘விஷ்ணுவின் 11வது அவதாரம்’ எது என்று கேட்டால் ‘பிரதமர் மோடி’ என்று காட்டுகிறது. மேலும் ‘அல்லாஹூ அக்பர்’ என்பதை ‘பயங்கரமான சொல்’ என்று குறிப்பிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பந்து வீச்சாளரான ரஷீத் கான் மனைவி யார்? என்று கேட்டால் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை காட்டுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

Rashid_Khan_Anushka_Sharma
Rashid_Khan_Anushka_Sharma

ஆப்கானிஸ்தான் அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரஷீத் கான் 2018 இல் முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஆப்கானிஸ்தான் அணியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து வங்க தேசத்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வழி நடத்தி டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றவர் ரஷீத் கான்.

Rashid_Khan_Anushka_Sharma
Rashid_Khan_Anushka_Sharma

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையை இருப்பவர் அனுஷ்கா சர்மா. இப்பொழுது கூகிளில் ரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மா என்று வந்ததற்கு காரணம் என்னவென்றால், இன்ஸ்டாவில் ரஷித் கானிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார்? என்று கேட்டதற்கு ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அனுஷ்கா சர்மா என்று பதிலளித்துள்ளார். இதனால் பலரும் ரஷீத்துக்கு பிடித்த நடிகை அனுஷ்கா என்று பதிவிட்டுள்ளனர். இதனால் தொழில்நுட்ப ரீதியில் தவறாக புரிந்து கொண்ட கூகிள் ரஷீத் மனைவி அனுஷ்கா என்று காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here