நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடங்கியதில் இருந்தே அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, சற்று குறையத் தொடங்கி உள்ளது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோர் நகைக்கடை பக்கம் செல்லத் தொடங்கி இருக்கின்றனர்.

இன்றைய விலை நிலவரம்:

கடந்த வருட டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா தொற்றால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிந்தது. இதனால் பிற பங்குகள் சரிய முதலீட்டாளர்களின் பணம் அபாயத்தில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது அதிகளவு முதிலீடுகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக வரலாறு காணாத அளவு விலை உயர்ந்து கொண்டே சென்றது. இம்முறை அட்சய திருதியைக்கு கூட நகை விற்பனைக்கு அரசு அனுமதிக்கவில்லை.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Gold Purchase
Gold Purchase

இருப்பினும் விலை மட்டும் உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த ஆகஸ்ட் மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. வரலாற்றிலேயே இது தான் அதிகபட்ச விலையாகும். இந்நிலையில் பொது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை சிறிது சிறிதாக குறையத் தொடங்கி உள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ‘ஆதார் PVC கார்டு’ அறிமுகம் – பெறும் முறை & கட்டண விபரங்கள் இதோ!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.19 குறைந்து 4,865 ரூபாயாகவும், ஒரு சவரன் 152 ரூபாய் சரிந்து ரூ.39,072 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,109, ஒரு சவரன் 40,872 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு ரூ.1.10 குறைந்து 66 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,000 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here