தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் – இதுவரை 59 லட்சம் பேர் பதிவு!!

0

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 59.50 லட்சமாக உயர்ந்துள்ளது. பள்ளி மாணவர்கள் தொடங்கி மாற்றுத் திறனாளிகள் வரை செப்டம்பர் 30ம் தேதி வரை பதிவு செய்தவர்களின் புள்ளி விபரங்கள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தின் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவற்றில் சில காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இதுவரை 59.50 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு,

  • 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் – 11,41,369 பேர்
  • 19 முதல் 23 வயதுடைய கல்லூரி மாணவர்கள் – 13,13,587 பேர்
  • 24 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் – 23,39,752 பேர்
  • 36 முதல் 57 வயதுடையவர்கள் – 11,47,194 பேர்
  • 58 வயதுக்கு மேற்பட்ட பதிவுதாரர்கள் – 9,046 பேர்

மொத்தமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 59,50,948 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி தனி இட ஒதுக்கீட்டில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளின் விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

  • கை, கால் குறை உள்ளவர்கள் – 1,02,907 பேர்
  • பார்வை குறைபாடு உள்ளவர்கள் – 16,112 பேர்
  • வாய் பேசாத & காது கேளாதவர்கள் – 13,798 பேர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here