Monday, April 29, 2024

தங்கம் மற்றும் பெட்ரோல் விலை நிலவரம் – இவ்வளவா??

Must Read

கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான உயர்வை அடைந்த தங்கத்தின் விலை படிப்படியாக சரிவை சந்தித்து வருகிறது.

உச்சம் அடைந்த விலை:

கடந்த சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, கடுமையாக விலை உயர்ந்து வந்தது. உச்சகட்டமாக தங்கத்தின் விலை 43,000 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதே போல் நேற்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 300 ரூபாய் குறைந்து காணப்பட்டது. இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்றைய விலை:

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ரூ.39,584 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமுக்கு ரூபாய் 45 குறைந்து ரூ.4,948 என்று விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 72 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை படிப்படியாக குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு விலை நிலவரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்க தான் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேர்மாறாக, படிப்படியாக உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக வாகனஓட்டிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

ஊரடங்கால் ஏற்பட்ட நிலை:

கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி இந்தியா அரசால் அணைத்து மாநிலங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக கச்சா எண்ணெய்யின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

petrol and diesel rate
petrol and diesel rate

ஆனால், மே மாதத்தில் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்ட காரணத்தால், கச்சா எண்ணையின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. விலை நிலவரம் அதிகரித்து கொண்டே இருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் எரிபொருள் தேவை அதிகமாக இருந்ததாலும் விலை நிலவரம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது.

இன்றைய விலை நிலவரம்:

படிப்படியாக உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்றைய பெட்ரோல் விலை ரூ.84.52 என்றும் டீசலின் விலை ரூ.78.86 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் முழுமையாக தளர்வுகள் அறிவிக்கப்படாத நிலையில், இப்படி விலை ஏற்றம் இருந்தால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின் நிச்சயமாக விலை அதிகரிக்கத்தான் செய்யும் என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -