Thursday, May 2, 2024

சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!!

Must Read

தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று மக்கள் மனதில் பால் வார்ப்பது போல அதிரடியாக குறைந்துள்ளது. யாருமே எதிர்பாராத அளவு விலை நிலவரம் சரிந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்க உள்ளதால் மக்கள் தற்போது நகைக்கடைகளுக்கு படை எடுத்துள்ளனர்.

கொரோனா பரவல்:

பெண்களுக்கு என்றும் தங்களை அலங்கரித்து பார்ப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி ஏற்படும். அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை அணிவதில் எந்த பெண்ணுக்கும் பிடிக்கும். இதன் காரணமாக என்றும் தங்கம் மற்றும் வெள்ளி நகை மற்றும் பொருட்களுக்கு தனி மவுசு உண்டு. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் மாறி கொண்டே இருக்கும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

gold and silver rate in tn
gold and silver rate in tn

கொரோனா நோய் பரவலின் போது தங்க விலை யாரும் எதிர்பாராத அளவு கூடியது. காரணம், தங்களது தொழில்நலன் மற்றும் எதிர்கால நலன் கருதி பாதுகாப்பான முதலீடாக தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் தொடர்ச்சியாக தங்க விலை உயர்வினை மட்டுமே சந்தித்து வந்தது.

இன்றைய விலை நிலவரம்:

இப்படியான நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக அதிரடியாக உயர்ந்து வந்தது. தங்கம் சவரனுக்கு மீண்டும் 40 ஆயிரத்தை தொட்டு விடும் அபாயத்திலும் இருந்தது. ஆனால், இன்று யாருமே எதிர்பாரா அளவு தங்க விலை சவரனுக்கு 1000 ரூபாய்க்கும் அதிகமாக சரிந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து ரூ.38,128 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு கிராம் ரூ.156 குறைந்துள்ளது. தூய தங்கமும் (24 கேரட்) ஒரு பவுன் 1248 ரூபாய் குறைந்து ரூ.41,168 4என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.66.90 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,900 என்று விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -