Friday, May 10, 2024

அதிரடியாக குறைந்த தங்க விலை – மகிழ்ச்சியில் மக்கள்!!

Must Read

கடத்த சில நாட்களாக தண்ணி காட்டி வந்த தங்க விலை இன்று குறைந்து மக்கள் மனதில் பாலினை வார்த்துள்ளது. சமீப காலமாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா பரவல்:

கடத்த மார்ச் மாதம் கொரோன பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கம் காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. தொழில் நிறுவனங்கள் முடங்கிய காரணத்தால் பங்கு சந்தை என்றும் காணாத அளவு சரிவினை சந்தித்தது. பங்கு சந்தை சரிவினை கண்ட தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் அனைவரும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தில் முதலீடு செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் விளைவு, கொரோனா பொது முடக்க காலத்தில் கூட தங்க விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்தது. மீண்டும் தங்க விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தொட்டு விடுமோ என்று மக்கள் அச்சம் அடைந்தனர். இப்படியான நிலையில், தான் வாரத்தின் முதல் நாளான இன்று தங்க விலை குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை:

சென்னையில் இன்று ஆபரண தங்கம் (22 கேரட்) இன்று சவரனுக்கு 72 குறைந்து ஒரு பவுன் தங்கம் 37,704 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 9 ரூபாய் குறைந்து 4,713 என்று விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கமும் 72 ரூபாய் குறைந்து 40,728 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஒரு கிராம் தூய தங்கம் 5,091 என்று விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க வெள்ளி விலை 66.10 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,100 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரத்தால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது… விராட் கோலியின் ஓபன் டாக் வைரல்!!

IPL 2024 தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 58 வது லீக் போட்டியில் பெங்களூர் அணி, பஞ்சாப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -