குழந்தைகளை குறிவைக்கும் ஆப்ஸ் – மொபைலில் இருந்து நீக்க கோரி கூகிள் எச்சரிக்கை!!

0

தற்போது குழந்தைகள் இடையே ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகம் உள்ளது. மேலும் ஸ்மார்ட் போனில் பல ஆபத்தான விளைவுகளும் உள்ளன. அந்த வகையில் தற்போது குழந்தைகள் சார்ந்த தகவல்களை திருடியதற்காக ப்ளே ஸ்டோரில் இருந்து கூகிள் 3 ஆப்களை நீக்கியுள்ளது. மேலும் அந்த பயன்பாட்டை போனில் இருந்து நீக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது.

கூகிள் ஆப்

கூகிள் நிறுவனம் தற்போது குழந்தைகளின் நலன் கருதி மூன்று ஆஃப்களை தகவல் திருடப்பட்டதாக தடை விதித்துள்ளது. தடை விதித்தது மட்டுமில்லாமல் இவ்வகையான செயலியை நீக்க சொல்லியும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூகிள் பிலே ஸ்டோரில் அனுமதிப்பதற்கு முன் பல கட்ட சோதனை பின்னரே அதன் செயலியை நாம் பயன்படுத்த வழிவகுக்கிறது. இருந்தும் கூட சில ஆஃப்கள் எப்படியோ உள்நுழைந்து குழந்தைகள் பெரியோர்கள் சிறியோர்கள் அனைவரும் பாதிக்க கூடிய வகையில் பதிவிறக்க கிடைக்கின்றன.

அப்படி பட்ட திகிலூட்டும் செயலி குழந்தைகள் தகவல்களை திருடும் விதமாக அமைந்துள்ளது. ஆதலால் இத்திருட்டை செய்து வந்துள்ள செயலி சொந்தக்காரர் (ஐடிசிஏ) என்று அழைக்க படும் அகவுண்டபிளிட்டி கவுன்சில் செவிக்கு கொண்டு போயுள்ளது. அதன் பின் குழந்தைகளுக்காக வடிவமைக்க பட்டதாக கூறப்படுகின்ற இந்த செயலி கூகிள் ஸ்டோரின் விதிமுறைகளை மீறுகிறது என்பதால் புகார்கள் எழுந்துள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐடிசிஏ கூகுள் ஸ்டோரிடம் கலந்துரைத்து மூன்று செயலியும் நாங்கள் அகற்ற பட்டதை உறுதி செய்கிறோம். இவ்வகையான செயலிகள் இனி வராது என உறுதி அளிக்கும் விதமாக நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஐடிசிஏ தலைவர் குவென்டின் பால்ஃப்ரே தெரிவித்துள்ளார். இந்த மூன்று ஆப்களின் பெயர்கள் – Princess Salon, Number Coloring மற்றும் Cats & Cosplay என்பதாகும்.

google apps delete 1

கூகிள் ஸ்டோர் இம்மாதிரியான செயலிகள் நீக்கப்படுவது இது முதல் முறை கிடையாது என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. இம்மூன்று செயலியும் எவ்விதமான தகவல்களை திருடியது?? மூன்றாம் தரப்பினரிடம் பகிர்ந்துள்ளது?? என குறிப்பிடப்படவில்லை. இனி வரும் காலங்களில் இம்மாதிரியான செயலிகள் வந்தாலும் நாங்கள் நீக்க ரெடியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐடிசிஏ தலைவர் குவென்டின் பால்ஃப்ரே இவ்விதமான 3 செயலிகள் சில மன கவலைகள் அளிப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here