சளி இருமலை விரட்டும் மஞ்சள் இஞ்சி டீ

1
Ginger-Turmeric-Tea
Ginger-Turmeric-Tea

வீட்டில் உள்ள சாதாரணப் பொருட்களை கொண்டு, நமது உடலில் பெரும் நலன் உண்டாக்க கூடிய ஒரு வகையான மூலிகை டீ செய்வது எப்படி என்றும் அதன் பயன்கள் பற்றியும் காண்போம்.

தேவையான பொருட்கள்

2 தம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகு, சிறிய துண்டு இஞ்சி, 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை, 2 பட்டை மற்றும் 1/2 எலுமிச்சை

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பற்ற வைக்க வேண்டும். பின்பு, அதனில் 2 தம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். வந்தாச்சு குட்டி சோபி டர்னர்!! அதனுடன், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

அதனோடு நன்கு தோல் அகற்றி இடித்து வைத்த சிறிது இஞ்சியை அதனுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின், 1 ஸ்பூன் மிளகையும் அம்மியில் நன்கு அரைத்து கொதிக்கும் அந்த தண்ணீரில் சேர்த்து கொள்ள வேண்டும். சேர்த்தப் பின் நன்கு கலக்க வேண்டும்.

மேலும் அத்துடன், இரு பட்டைகளை நன்கு இடித்து பொடியாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு, அதனை நன்கு கொதிக்க விட வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து, அதனுடன் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், 1/2 எலுமிச்சை பழத்தை நன்கு பிழிந்து அதனுள் சேர்த்து கலக்க வேண்டும். இறுதியில், குடிக்கும் பதத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான மஞ்சள் இஞ்சி டீ தயாராகிவிடும்.

பயன்கள்

இஞ்சியில் உள்ள ஆன்டிஹிஸ்டமைன் பண்புகள் ஒவ்வாமைகளை குணப்படுத்த உதவுவதுடன், சளி மற்றும் காய்ச்சலை விரட்டி அடிக்க உதவுகிறது. மேலும், இந்த மஞ்சள் இஞ்சி டீயை தினமும் உட்கொண்டால், தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் அடைய இயலும். நுரையீரல், கருப்பை, புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இந்த டீயில் உள்ளது.

இந்த டீ, நமது உடலில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்ட்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here