கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்வு?? இந்தியன் ஆயில் நிறுவனம் ஆலோசனை!!

0

தட்கல் முறை மூலமாக சமையல் எரிவாயு பதிவு செய்து பெற்றால் கூடுதலாக 25 ரூபாய் கட்டணமாக கட்ட வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த முறையினை அறிமுகப்படுத்தியது.

தட்கல் முறை மூலம் பதிவு:

மத்திய பொதுத்துறை நிறுவனம் நாட்டில் கிட்டத்தட்ட 28 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் புதிதாக கேஸ் இணைப்பு பெரும் வாடிக்கையாளர்களுக்கு என்று தட்கல் என்ற முறையினை அறிமுகப்படுத்தியது. கூடுதலாக, இந்த நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் ஓடிபி எண் முறையை கூட அமலுக்கு கொண்டு வந்தது.

தடாலடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – வெள்ளியின் விலையும் அதிகரிப்பு!!

LPG coverage ratio: LPG cylinder now used by 89% households

இந்த நிறுவனம் அறிவித்துள்ள தட்கல் முறை வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த தட்கல் முறையின் சிறப்பு கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்த 40 முதல் 45 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைத்து விடும். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த திட்டத்தினை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Domestic LPG to be made available in Assam during lockdown: Indian Oil

இப்படி விரைவாக கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து விடுவதால் கூடுதலாக 25 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிலர் தெரிவிக்கையில், “தட்கல் முறை ஒன்றும் புதிது இல்லை. மக்கள் அவசரமாக கேஸ் வேண்டும் என்று தெரிவித்தால் உடனடியாக புக்கிங் செய்து கூடுதல் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்வர்” இவ்வாறாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here