‘ஹேமந்த் சந்தேகப்பட்டதால் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார்’ – காவல்துறை பரபரப்பு அறிக்கை!!

0

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை விசாரித்து வந்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் தற்போது அவரது தற்கொலை குறித்த காரணம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் தான் சித்ரா. இவர் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சிக்குள் வருவதற்கு மிகவும் கஷ்டபட்டுள்ளார். இதனை அவரே கூறியுள்ளார். திடிரென்று யாரும் எதிர்பாராத வகையில் சித்ரா கடத்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி அன்று பூந்தமல்லி அருகே உள்ள பழஞ்சூர் தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் இவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இவரது தற்கொலை குறித்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்கொலைக்கு தூண்டிய காரணத்தினால் ஹேமந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சித்ராவின் தாயார் விஜயா முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சித்ராவின் தற்கொலை வழக்கை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவிக்கு மற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். பின்பு நசரத்பேட்டை காவல் நிலைய போலீசார் தங்களது விசாரணை அறிக்கை அனைத்தையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்வு?? இந்தியன் ஆயில் நிறுவனம் ஆலோசனை!!

மேலும் ஹேமந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கும் சித்ரா தற்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் எனவே தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேமந்த் சந்தேகப்பட்டதால் தான் சித்ரா தற்கொலை செய்துள்ளார் என்று சென்னை நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மேலும் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் இந்த வழக்கு குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here