14வது ஐபிஎல் தொடர் – சிஎஸ்கே அணியில் நீடிப்பாரா ரெய்னா?? தோனி கையில் முடிவு!!

0

தற்போது இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் 14 வது ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தற்போது வர போகும் ஐபிஎல் போட்டிக்காக சிஎஸ்கே அணி தனது அணியின் மூத்த வீரர்கள் பலரை கழட்டிவிட முடிவு செய்துள்ளது.

14வது ஐபிஎல்:

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் 14வது ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் போட்டியில் விளையாட உள்ளதால் இந்த ஆண்டு மெகா ஆக்சன் நடக்காது என்றும் அடுத்த ஆண்டு நடைபெறவிற்கும் ஐபிஎல் தொடருக்கு தான் மெகா ஆக்சன் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை வரும் 21ம் தேதி அன்று அணியில் இருந்து நீக்கும் வீரர்களை தெரிவிக்கவேண்டும் என்றும் மேலும் இதற்கான வீரர்களை ஏலத்தில் வரும் பிப்ரவரி மாதம் எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடந்து முடிந்த 13வது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமாக விளையாடியது. மேலும் முதன்முறையாக சிஎஸ்கே அணி குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றிலையே வெளியேறியுள்ளது. இதற்கு 35 வயதிற்கு மேல் உள்ள வீரர்கள் தான் காரணம் என்று பலர் விமர்சித்து வந்தனர். மேலும் போட்டி முடிந்த பின்பு தோனி கூறியதாவது அடுத்த 10 ஆண்டிற்கு சிஎஸ்கே அணி வலிமையாக இருப்பதற்காக ஓர் அணியை உருவாக்க உள்ளோம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு அனைத்து மூத்த வீரர்களையும் சிஎஸ்கே அணி கழட்டிவிடப்போவதாக தெரிகிறது.

தோனி கையில் முடிவு:

மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலையே சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரரான வாட்சன் அனைத்து தரப்பு போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது இந்த ஆண்டுக்கான போட்டியில் சிஎஸ்க்கே அணியில் இருந்து மூத்த வீரர்களான ஹர்பஜன், முரளி விஜய் மற்றும் சாவ்லா ஆகியோரை விடுவிக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தடாலடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – வெள்ளியின் விலையும் அதிகரிப்பு!!

மேலும் ரெய்னா மற்றும் கேதர் ஜாதவ் அணியின் தொடர்வது குறித்து தோனி முடிவெடுப்பார் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் கூறியதாவது,”சிஎஸ்கே அணியுடனான எனது ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. சிறப்பான பல நிகழ்வுகளை எனக்கு தந்ததற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here