‘நாடும், மக்களும் நாசமாய் போகட்டும்’ நான் தோற்றுவிட்டேன் – பூமி பட இயக்குனர் வருத்தம்!!

0

நடிகர் ஜெயம்ரவி நடித்து தற்போது ஒடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் பூமி. விவசாயத்தை பற்றியும் நம் நாட்டின் தற்போதைய நிலையையும் சரியாக எடுத்து காட்டியிருக்கும் இத்திரைப்படம் குறித்து பல எதிர்மறையான கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

பட இயக்குனர் வருத்தம்

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்திருக்கும் இருபத்தைந்தாவது திரைப்படம் பூமி. லக்ஷ்மன் மற்றும் ஜெயம்ரவி கூட்டணி ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய வெற்றி படங்களை தந்தது. இவர்கள் இருவர் இணையும் மூன்றாவது படமான ‘பூமி’ க்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். இசையமைப்பாளர் இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பூமி படம் மே 1 அன்றே திரையிடப்படுவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கினால் இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியானது. நம் நாட்டில் விவசாயிகளின் நிலை பற்றியும், அரசின் நிலையை பற்றியும் இப்படம் எடுத்துரைத்தது. கருத்துக்கள் பேசப்படும் இப்படம் வெளியானது முதல் சில எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது ரசிகர் ஒருவரின் ட்விட்டர் பதிவுக்கு இயக்குனர் லக்ஷ்மன் பதில் அளித்துள்ளார்.

அஞ்சலி கர்ப்பமான தகவலை கேட்டு மகிழ்ச்சி அடையும் கண்ணம்மா – பல பாசபோராட்டங்களுடன் “பாரதி கண்ணம்மா”!!

பூமி படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ட்விட்டரில், நான் பார்த்த மோசமான படங்களில் ஒன்று பூமி. இப்படம் சுறா, அஞ்சான், ராஜபாட்டை படங்களின் வரிசையில் இருக்கிறது. ஜெயம்ரவி இயக்குனர் லக்ஷ்மனுடன் இணைந்து பணிபுரிய கூடாது என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு இன்னொரு ரசிகர் ஒருவர், இயக்குனர் உங்களை பிளாக் செய்யப்போகிறார் என்று பதில் கூறியிருந்தார்.

இந்தப்பதிவுக்கு இயக்குனர் லக்ஷ்மன், ‘சார், இந்த படம் பண்ணனும், நம் எல்லாருடைய வரும்காலம் நன்றாக இருக்க வேண்டுமென நினைத்தேன். உங்களுக்காக தான் இந்தப்படம் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் போல கமர்சியல் படங்கள் எடுக்க தெரியாதா எனக்கு? நம் நாடும் மக்களும் நாசமாய் போகட்டும். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நான் தோற்றுவிட்டேன்’ என்று உருக்கமாக பதிலளித்து இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here