சூப்பரான ‘French Fries’ மற்றும் ‘Tomato Sause’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
french fries
french fries

உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கை வைத்து ஏராளமான ஸ்னாக்ஸ் செய்து அசத்தலாம். அந்த வகையில் ‘French Fries’ மற்றும் தக்காளி சாஸ் வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு – 4
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • தக்காளி – 3
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • சர்க்கரை – 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அதன்பின் தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு உருளைக்கிழங்கை எடுத்து வடிகட்டி ஈரப்பதம் இல்லாமல் காயவைக்க வேண்டும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இந்த உருளை கிழங்கை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

french fries
french fries

முழுவதுமாக பொரித்து எடுத்ததும் அடுப்பை அதிக தீயில் வைத்து மீண்டும் பொரித்து எடுக்க வேண்டும் இப்பொழுது சூப்பரான ‘French Fries’ தயார். இதற்கு பொருத்தமான சாஸ் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

french friess
french friess

முதலில் தக்காளியை கழுவி நீரில் 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்( அதிக தண்ணீர் ஊற்றக்கூடாது. 3 தக்காளிக்கு அரை டம்ளர் தண்ணீர் போதுமானது). 15 நிமிடம் கழித்து தக்காளி நன்கு வெந்திருக்கும்.

tomato sause
tomato sause

அந்த தக்காளியை எடுத்து தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இப்பொழுது தக்காளி வேகவைத்த தண்ணீரில் இந்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும். கொதிவந்ததும் அதில் மிளகாய்த்தூள், சர்க்கரை சேர்த்து கிளறவும். 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்பொழுது இறக்கினால் சூப்பரான தக்காளி சாஸ் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here