ஜூலை மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் – தமிழக முதல்வர் அறிவிப்பு..!

0

தமிழகத்தில் ஜூலை மாதமும் ரேஷன் கடைகளில் இலவசமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.

ரேஷன் பொருட்கள்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தினமும் சராசரியாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். இதனால் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் அரசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஏற்கனவே 3 மாதங்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Tamilnadu CM
Tamilnadu CM

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற புலியூர் நாகராஜன் கொரோனா வைரசால் உயிரிழப்பு..!

இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்து இருந்தார். இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்து உள்ளார். இதற்கான டோக்கன் வரும் ஜூலை 6ம் தேதி முதல் பொதுமக்களின் வீட்டிற்கே வந்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here