Saturday, May 18, 2024

வெற்றி கனியை பெற்று தந்த கேப்டன் கபில் தேவ் – 37 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி உலகக்கோப்பை வென்ற தினம் இன்று!!

Must Read

37 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இந்திய கிரிக்கெட்அணி கபில் தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்றது.

கிரிக்கெட் காதல்:

இந்தியாவில் பிறந்த அனைவர்க்கும் கிரிக்கெட் மீது தனி காதல் இருக்கும், அதற்கு வித்து இட்டது 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்ச் தான். இந்த மேட்சில் இந்திய அணி உலக கோப்பையை முதல் முறையாக வென்றது. அப்போது, கபில் தேவ் தலைமையில் இந்திய அணி செயல் பட்டது.

முதல் வெற்றி:

சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், மொகிந்தர் அமர்நாத், யஷ்பால் சர்மா, எஸ்.எம்.பாட்டீல், கபில் தேவ், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, மதன் லால், சையத் கிர்மானி, மற்றும் பால்விந்தர் சந்து உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியது ,அவர்களை 43 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெயித்தது.

praised by PM indira gandhi
praised by PM indira gandhi

முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பௌலிங் செய்ய முடிவு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன் மட்டுமே எடுத்து இருந்தது. ஆனாலும் மனம் தளராமல் விளையாண்டனர்.அதிக ரன்கள் எடுத்தவராக கிரிஸ் ஸ்ரீகாந்த் கூட இந்த ஆட்டத்தில் 38 ரன்களை மட்டுமே எடுத்தார். வேறு எந்த பேட்ஸ்மேன் 30 ரன்களை கடக்க முடியவில்லை.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

victory celebration
victory celebration

ஆனால், பௌலிங் செய்யாத போது எதிரணியை சிதற அடித்து இருக்கின்றனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் விவியன் ரிச்சாட்ஸை (33) ரன்களில் ஆட்டமிழக்க செய்து வெற்றி வித்து இட்டு உள்ளனர். தொடர்ந்து 57/3 என்று ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைத்து இருக்கின்றனர். இறுதியாக எதிரணி 140 ரன்களில் ஆட்டத்தை இழந்து உள்ளது.

captain kapil dev with world cup
captain kapil dev with world cup

இதனால் இந்தியா 43 ரன் வித்தியாசத்தால் வெற்றி கோப்பையை பெற்று உள்ளது.மொகிந்தர் அமர்நாத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டர். இந்த ஆட்டத்தை இன்று வரை யாராலும் மறக்க முடியாததாக உள்ளது. இந்தியா அணி வெற்றி பெற்றதை தொடரந்து அன்றைய பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி பொது விடுமுறையை அறிவித்தார். அவர் இந்திய அணி கேப்டன் கபில் அவர்களை பாராட்டியும் உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -