நிர்பயா வழக்கில் நாளை தூக்கு உறுதி – கதறும் குற்றவாளியின் மனைவி.!

0

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனை தள்ளிபோனதை தொடர்ந்து வரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்த நிலையிலும் நாளை கண்டிப்பாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

நிர்பயா வழக்கு விபரம்:


டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார்.

நாளை தூக்கு

குற்றவாளிகள் 4 பெரும் தூக்கு தண்டனையை நிறுத்த கூறி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தாக்கலும் தள்ளுபடி செய்து நாளை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் நிலுவையில் இருப்பதால், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த விசாரணை நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா வழக்கின் தீர்ப்பை பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடுவதாக கூறி இருந்ந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இர்பான் அகமது நீதிமன்றத்தில் கூறுகையில், “குற்றவாளிகள் 4 பேருக்கும் எந்தவிதமான சட்ட வாய்ப்புகளும் நிலுவையில் இல்லை. பவன் குப்தா, அக்சய் ஆகியோரின் 2-வது கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பரிசீலிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

அதன் பின் நீதிபதி தர்மேந்திர ராணா பிறப்பித்த உத்தரவில் குற்றவாளிகள் தண்டனையை நிறுத்த கூறி தாக்கல் செய்த மனுவில் எந்த நியாயமான காரணங்களும் இல்லை. தங்களின் சட்ட வாய்ப்புகள் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். ஆதலால், குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்தி வைக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. ஆதலால் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்” என உத்தரவிட்டார்.

இதனை கேட்ட அக்சய் குமார் சிங்கின் மனைவி நீதிமன்ற வாசலிலே கதறி அழுதுள்ளார். இனிமேல் நான் எப்படி வாழ்வேன். என்னையும் தூக்கிலிடுங்கள் என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை அதிகாலை 5.30 மணிக்குள் திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்பது உறுதியாகிவிட்டதாக திஹார் சிறை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here