ஓவன் தேவையே இல்ல – இனிமேல் வீட்டுலயே செய்யலாம் Choco Lava Cake.!

0

கேக் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். லாவா கேக் வெளியில் வாங்கினால் அதிக செலவாகுமோ என்று நினைப்பவர்களும் உண்டு. மேலும் கொரோனவால் கடைகளில் வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். இப்பொழுது Choco Lava Cake வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

Dairy Milk 150கி , மைதா, சர்க்கரை பவுடர், பேக்கிங் சோடா, பால் 3 கப், வெண்ணெய், cocoa powder

செய்முறை

முதலில் குக்கரில் உப்பை பரப்பி வைத்து இரும்பிலான ஸ்டாண்டை உள்ளே வைக்கவும். பிறகு அடுப்பை சிறியதாக வைத்து குக்கரை மூடி வைக்கவும். அதன்பின் ஒரு சல்லடையில் cocoa powder, மைதா, சர்க்கரை பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும். பின்பு அதில்கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கலக்கி கொள்ளவும்.

ஒரு மாவு பதத்திற்கு கலக்கி எடுத்து கொள்ளவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதன் மேல் கண்ணாடி பாத்திரத்தை வைத்து Dairy Milk சேர்த்து உருக்கவும். அதன் பின் அதில் வெண்ணெய் சேர்த்து நன்கு உருக்கவும். அதன்பின் நாம் தயாராக வைத்திருந்த மாவில் சேர்த்து நன்கு கிளறவும்.

அதில் சிறிது பாலை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி குக்கரில் வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு 10 நிமிடம் கழித்து இறக்கவும். இப்பொழுது Choco Lava Cake தயார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here