டிராக்டரில் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி – இன்று காலை துவங்கியது!!

0

குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியயை துவங்கியுள்ளனர். இரண்டு லட்சம் டிராக்டர்களில் இன்று காலை துவங்கிய பேரணி மாலை 6 மணிக்கு முடிவடையும் என்று கூறப்படுகிறது.

விவசாயிகள் பேரணி

டெல்லியில் கடந்த 62 நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் 11 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் விவசாயிகள் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக உள்ளனர். தற்போது குடியரசு தினத்தை ஒட்டி சுமார் 2 லட்சம் டிராக்டரில் விவசாயிகளை பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதைத்தொடர்ந்து குடியரசுதினமான இன்று விவசாயிகள் தங்கள் பேரணியை துவங்கியுள்ளனர். இந்த பேரணி டெல்லியின் புறநகர் பகுதியான டெல்லி – ஹரியானா எல்லையான சிங்குவிலிருந்து துவங்கி கன்ஜாவாலா, பவானா, அவுசாண்டி எல்லை, கே.எம்.சி எக்ஸ்பிரஸ் வழியாக சென்று மீண்டும் சிங்குவில் முடிவடைகிறது. மீண்டுமாக திக்ரித் எல்லையிலிருந்து துவங்கும் விவசாயிகளின் பேரணி நாக்லோ, நஜாப்கர் மற்றும் மேற்கு எல்லைப்பகுதியான எக்ஸ்பிரஸ் வழியாக சென்று மீண்டும் நாக்லோ சென்றடையும்.

தொடர்ந்து மூன்றாவது பேரணி டெல்லி – உத்திரபிரதேச எல்லையான காஜிப்பூரிலிருந்து துவங்குகிறது. இந்த பேரணி குண்ட்லி, காஜியாபாத், பல்வால் எக்ஸ்பிரஸ் வழியாக சென்று மீண்டும் காஜிப்பூர் சென்றடையும். குடியரசுதின கொடியேற்றத்துக்கு பிற்பாடு துவங்கின பேரணியானது 100 கிலோ மீட்டர் வரை தொடர்ந்து நடைபெற்று மாலை 6 மணிக்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here