72வது குடியரசு தினவிழா – விருதுகளை வழங்கும் தமிழக முதல்வர்!!

0

நாட்டில் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது விழாவை முன்னிட்டு சிறந்த செயல்களை செய்தவர்களுக்கு விருது வழங்கி வருகின்றனர். இந்த விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

குடியரசு தின விழா:

இன்று நாட்டின் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோட்டையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். மேலும் சென்னை கடலோர பகுதியிலும் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக கலை நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளன. தற்போது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சிறந்த செயல்களை செய்தவர்கள், வீர செயல்களை செய்தவர்களை பட்டியலிட்டு தற்போது அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை தமிழக முதல்வவர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளார்.

அண்ணா பதக்கம்:

அதன் அடிப்படையில் ரயில் விபத்தை தடுக்கும் நோக்ககில் சிறப்பாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுரேஷிற்கு அண்ணா பதக்கத்தை முதல்வர் வழங்கினார். இவர் கடும் பனிமூட்டத்திலும் தண்டபாலத்தில் கிடந்த இரண்டு பாறைகள் இருப்பதை கண்டு விபத்து நேராமல் சிறப்பாக விபத்தை தடுத்துள்ளார். அதற்காக இவருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் நீலகிரியை சேர்ந்த காவலர் ஜெயராம் உயிரை காப்பாற்றிய வாகன ஓட்டுநர் புகழேந்திரனுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

பொதுமுடக்க காலத்தில் கோடிகோடியாக சொத்துகளை சேர்த்த செல்வந்தர்கள் – ஆய்வு முடிவில் தகவல்!!

பின்பு தருமபுரி பகுதியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து யானையை நலம் பெற செய்த மருத்துவர் பிரகாஷிற்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் புலிவலம் அரசுப்பள்ளி உதவி ஆசிரியை தனது உயிரை சிறிதும் பொருட்படுத்தாமல் 26 மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியை முல்லைக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு பதக்கங்களுடன் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here