72வது குடியரசு தின விழா – சென்னை கோட்டையில் கொடி ஏற்றிய ஆளுநர்!!

0

இன்று நாட்டின் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. தற்போது இதனை முன்னிட்டு சென்னை கோட்டையில் ஆளுநர் தற்போது கொடியை ஏற்றியுள்ளார். மேலும் சிறப்பு விருதுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கவுள்ளார்.

குடியரசு தின விழா:

இன்று நாட்டின் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான் இந்தியா நாடு ராஜா கால ஆட்சியினை துறந்து, மக்கள் விரும்பும் ஜனநாயக நாடக உருவெடுத்தது. அதனை நினைவு கூறும் வகையில் நாம் இந்த தினத்தை கொண்டாடி வருகிறோம். தற்போது சென்னையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டையில் ஆளுநர் பன்வாரிலால் பிரோகித் தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தார். கொடி ஏற்றப்பட்டதும் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. மேலும் ஆளுநருக்கு முப்படை மரியாதை வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் ஆளுநர் பன்வாரிலால் பிரோகித் பல தரப்பினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார். மேலும் ராஜாஜி சாலையில் அமைந்த்திருக்கும் போர் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து தனது மரியாதையை செலுத்தியுள்ளார். மேலும் சென்னை கடற்கரை சாலையில் தமிழக அரசு சார்பில் காந்தி சிலை அருகே குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் கலந்துகொள்ள தடைவிதித்துள்ளதால், விழாவை தொலைக்காட்சிகளில் நேரடியாக காண்பதற்கு தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.

நாட்டின் 72 வது தின குடியரசு தின விழா – அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

விருதுகள்:

விழாவின் போது மகாத்மா காந்தியடிகள் பதக்கம், கோட்டை அமீர் விருது மற்றும் முதன்முறையாக நெல் உற்பத்தி திறனுக்கான நாராயணசாமி விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த விருதுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்க உள்ளார். தற்போது மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்ததை ஒட்டி தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் முப்படை அணிவகுப்பு, அரசு துறை சார்பில் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளின் அணிவகுப்புகளும் விழாவில் இடப்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here