விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம்., ஆனா மாதம் ரூ.55 செலுத்தணும்? மாஸ் அறிவிப்பு!!!

0
விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம்., ஆனா மாதம் ரூ.55 செலுத்தணும்? மாஸ் அறிவிப்பு!!!
விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம்., ஆனா மாதம் ரூ.55 செலுத்தணும்? மாஸ் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எதிர்கால ஓய்வூதிய நலன் கருதி “பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா” திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள், மாதந்தோறும் குறிப்பிட்ட பிரீமியம் தொகையை, தனது 60 வயது வரை செலுத்தி வர வேண்டும். அதாவது 18 வயதில் சேர்ந்தால் ரூ.55 யும், 30 வயதில் சேர்ந்தால் ரூ.110 யும், 40 வயதில் சேர்ந்தால் ரூ.200 யும் பிரீமியம் செலுத்த வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

அப்படி செலுத்தி வரும் பட்சத்தில், இத்திட்ட முதிர்ச்சிக்கு பிறகு, மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம். அப்படி முதலீடு செய்தவர் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது நாமினிக்கு 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்படும். அல்லது அதுவரை செலுத்திய தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தில் பதிவு செய்ய அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

இல்லத்தரசிகளே.., சிலிண்டர் கிடைப்பதில் வந்த சிக்கல்.., மார்ச் 31 க்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here