டெல்லி செங்கோட்டை முற்றுகை, தேசியக் கொடி அகற்றம் – தீவிரமடையும் போராட்டம்!!

0

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு பிறகு தலைமை காவல்துறை அலுவகத்தையும் டெல்லி செங்கோட்டையையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்

செங்கோட்டையில் போராட்டம்

வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி நடக்கும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக வலுவடைகிறது. இன்று காலை டிராக்டர் பேரணியாக செல்ல இருந்த விவசாயிகளின் மீது அத்து மீறி நுழைந்ததாக கூறி போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அப்புறப்படுத்த முயன்றனர். இந்த போராட்டம் தற்போது வேறு விதமாக வெடித்துள்ளது.

தென் தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ஏற்கனவே அறிவித்தபடி சிங்கு எல்லையிலிருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கியுள்ளனர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீச தொடங்கினார்கள். அதனால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்.

விவசாயிகள் தற்போது டெல்லியில் உள்ள தலைமை காவல்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். தலைமை காவல் அலுவகத்தை சுற்றிலும் போராட்டக்காரர்களின் டிராக்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெல்லி செங்கோட்டையும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை கொடிக்கம்பத்தில் ஏற்றியுள்ளனர். குடியரசு தினவிழா நடந்து முடிந்த சிலமணி நேரத்தில் நடந்த இச்சம்பவம் வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here