
எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்திடம் ஈஸ்வரியும் ஜனனியும் அப்பத்தா எங்கே என்று கேட்க அவர் இப்போதைக்கு அப்பத்தாவை பார்க்க முடியாது என்கிறார். இந்த பக்கம் குணசேகரனுக்கு ஜான்சி ராணி பிரச்சனை மேல் பிரச்சனை கொடுத்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜீவானந்தம், வெண்பாவை பார்த்துவிட்டு ஈஸ்வரி, ஜனனி இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். அந்த நேரத்தில் ஈஸ்வரியை பார்க்க அவரது அப்பா வீட்டுக்கு வருகிறார். அப்போது ஈஸ்வரியின் அப்பா குணசேகரனிடம் ஜீவானந்தம் வீட்டுக்கு வந்ததாகவும், அவன் வேறு யாரும் இல்லை ஈஸ்வரியை காதலிப்பதாக சொல்லி பொண்ணு கேட்டவன் தான் என்று சொல்ல குணசேகரன் அதிர்ச்சியாகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அப்போது விசாலாட்சி உங்களுக்கு எதை எங்க பேசணும் கொஞ்சம் கூட அறிவில்லையா என சத்தம் போடுகிறார். உடனே இந்த விஷயத்தை ரேணுகா, நந்தினி ஈஸ்வரியிடம் சொல்ல அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட குணசேகரன் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக வெளியே வந்து விடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் ஜீவானந்தத்தின் செயலால் ஈஸ்வரியை குணசேகரன் டார்ச்சர் செய்வார் என்று தான் தெரிகிறது.