Monday, April 29, 2024

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் – இன்று தொடங்கியது!!

Must Read

கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இன்ஜினியரிங் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் சேர்க்கை:

இந்த ஆண்டிற்கான இன்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதியான மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 461 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு 1,60,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் தேர்வரானவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தற்போது 1,12,406 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

engineering counselling
engineering counselling

அவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. இன்று நடைபெறும் என்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மட்டும் தான் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.

பரவலாக சில மாவட்டங்களில் மிதமான மழை – இன்றைய வானிலை நிலவரம்!!

இந்த கவுன்சிலிங் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக, இன்று ஆரம்பித்து வரும் 5 ஆம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவினராக கருதப்படும் விளையாட்டு பிரிவினர், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முழு விவரம்:

சிறப்பு பிரிவு மாணவர்கள் எண்ணிக்கை விவரம்,

  • விளையாட்டு பிரிவினர் – 1409 மாணவர்கள்
  • முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் – 855 மாணவர்கள்
  • மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகள் – 149 மாணவர்கள்

மேலும், கவுன்சிலிங் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை,

  • பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்.
  • தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்.

கணினி வசதி இல்லாத மாணவர்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டிருக்கும் உதவி மையங்கள் மூலம் கவுன்சிலிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -