தாமதமாக வடிவேல் பாலாஜிக்கு துக்கம் அனுசரிக்கும் தனியார் தொலைக்காட்சி – கோபத்தில் ரசிகர்கள்!!

0
vadivel balaji

இந்திய திரையுலகம் பல ஈடுசெய்ய முடியாத இழப்புகளை இந்த வருடம் சந்தித்துள்ளது. சுஷாந்த் சிங், இர்பான் கான், எஸ்.பி.பி, வடிவேல் பாலாஜி என பல கலைத்துறையினரை இழந்துளோம். தமிழ்நாட்டில் எஸ்.பி.பி, வடிவேல் பாலாஜியின் இறப்பு ஈடுசெய்ய முடியாத அளவிற்கு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வடிவேல் பாலாஜி:

மதுரையில் பிறந்து நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்தவர் வடிவேல் பாலாஜி. காமெடி என்பது எவராலும் எளிதாக செய்யும் விஷயம் அல்ல. அந்த வகையில் வடிவேல் பாலாஜிக்கு காமெடி கடவுளின் வரப்பிரசாதமாகவே அமைந்தது.

vadivel balaji
vadivel balaji

எண்ணற்றவர்களை சிரிக்க வைத்து பார்த்தவர். தற்போது அவர் அனைவரையும் கவலையில்  ஆழ்த்தி விட்டு சென்று விட்டார். மேலும் திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார் வடிவேலு பாலாஜி.

vadivel-balaji
vadivel-balaji

இவர் பிரபல தொலைக்காட்சியில் பணி புரிந்தது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. பல வருடங்களாக அவரது காமெடி நிகழ்ச்சியை அந்த சேனல் வெளியிட்டு வந்தது. ஆனால் அந்த பிரபல சேனல் அவர் இறந்ததற்கான எந்த இரங்கல் நிகழ்ச்சியும் நடத்தவில்லை.  மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பணமில்லாமல் அவரது குடும்பத்தினர் கஷ்டப்பட்ட பொழுது எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

vadivel-balaji
vadivel-balaji

மக்கள் பலரும் இதனால் கொதித்தெழுந்தனர். இத்தனைக்கும் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பி அவர்களுக்கு இரங்கல் தெரிவித்த இந்த பிரபல சேனல், இந்த சேனலுக்காக உழைத்த பாலாஜிக்கு ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது அனைவரின் கேள்வியாக இருந்தது.

vadivel balaji
vadivel balaji

தற்போது அவர் இறந்து கிட்டதட்ட 1 மாதம் ஆன நிலையில் அந்த சேனல் இப்பொழுது இரங்கல் தெரிவித்து ப்ரோமோ வெளியிட்டுள்ளது. இதற்கு பலர் அந்த சேனலை திட்டியும் கமன்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here