மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாத EMI தொகைக்கு ‘வட்டிக்கு வட்டி’ இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!!

0
Central Govt
Central Govt

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதாரம் கடுமையாக சரிந்ததால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. இதன் விளைவாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய காரணத்தால் பலரும் வேலையிழந்தனர். மேலும் போதிய வருமானம் இல்லாததால் வங்கிகளில் பெற்ற கடன் தொகைகளுக்கான தவணைத் தொகையை செலுத்திவதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவினை வெளியிட்டது. அதன்படி EMI தொகையை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட EMI தொகைக்கும் சேர்த்து வட்டித்தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

emi

இது குறித்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பதில்மனுவில், 2 கோடி ரூபாய் வரை பெற்ற அனைத்து விதமான கடன் தொகைக்கும் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது என உறுதி அளிக்கப்பட்டது. அதற்கான தொகையை மத்திய அரசே வங்கிகளுக்கு செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான பிராமணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமின்றி EMI செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பதில் மனுவில் போதிய தகவல்கள் இல்லை எனவும், திருத்தப்பட்ட பிராமணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

சிறு குறு, கல்வி, வீட்டுவசதி, நுகர்வோர் பொருட்கள், வாகன கடன்கள், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் உட்பட அனைத்து விதமான கடன்களுக்கும் (ரூ.2 கோடிக்குள்) மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான ஒத்திவைக்கப்பட்ட தவணை தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உறுதிபட தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here