Monday, June 17, 2024

புதிய பி.வி.சி ஆதார் கார்டில் தமிழ் வார்தைகள் நீக்கம் – அதிருப்தியில் மக்கள்!!

Must Read

இந்திய மக்களின் தனித்துவ அடையாளமாக கடந்த சில ஆண்டுகளாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. இந்த ஆதார் கார்டு புதிய வடிவமைப்புடன் பி.வி.சி ஆதார் கார்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார்டில் தற்போது தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆதார் கார்டு:

உலக அளவில் பெரும் மக்கள் தொகையினை கொண்ட நாடு, இந்தியா. மக்கள் தொகை அதிகமுள்ள காரணத்தால் இந்த நாட்டில் வசித்து வரும் குடிமக்களுக்கு தனி அடையாள அட்டை மற்றும் பதிவு எண் வழங்குவதன் மூலம் குடிமக்களின் தரவுத்தளத்தை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்ட காரணத்திற்காக மத்திய அரசு ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. பல வித புதிய அம்சங்களுடன் ஆதார் கார்டினை மத்திய அரசு மேன்படுத்தி வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் கார்டு பி.வி.சி UIDAI அறிமுகப்படுத்தியது. இந்த பி.வி.சி கார்டு பழைய ஆதார் கார்டினை போல் அல்லாமல் பாலிவினைல் குளோரைடு கார்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த கார்டினை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். அதேபோல் இது மழை, வெயில் போன்றவற்றை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதால் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

 

தற்போது இந்த புதிய பி.வி.சி ஆதார் கார்டு குறித்து புகார் எழுந்துள்ளது. அது என்னவென்றால், பழைய ஆதார் கார்டில் “என் ஆதார், என் உரிமை” என்று தமிழில் எழுதப்பட்டிருக்கும். அது இந்த புதிய பி.வி.சி ஆதார் கார்டில் இல்லை என்று புகார் எழுந்துள்ளது. தமிழ் வார்த்தைகள் நீக்கப்பட்டது மட்டும் அல்லாமல் இந்தியில் அச்சடிக்கப்பட்டு இருப்பதால் அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -