‘ராதை மனதில்’ பாடலுக்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா – வைரலாகும் வீடியோ!!

0
Adjustment செய்யும்படி தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்துகொண்ட சித்ரா - வெளியான பகீர் தகவல்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் நடிகை தான் சித்ரா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ‘ராதை மனதில்’ என்ற பாடலுக்கு அசத்தலாக நடனமாடி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

சித்ரா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான ‘சரவணன் மீனாட்சியில்’ நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சித்ரா. சரவணன் மீனாக்ஷிக்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து தன் முயற்சியை செய்து கொண்டே இருந்தார். கலர்ஸ், ஜீ தமிழ் என பல சேனலில் பணிபுரிந்தார் சித்ரா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

chithra

அவரின் பல வருட முயற்சிக்கு பிறகு கிடைத்ததே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது முல்லையாக மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ளார். ஆரம்பத்தில் சுட்டி பெண்ணாக இருந்த முல்லை ஜீவாவை சிறுவயதில் இருந்தே காதலிக்கிறார்.

chithra
chithra

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

திருமணம் வரை சென்ற முல்லைக்கு ஜீவாவின் காதல் விவகாரம் தெரிய வர கதிரை திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆரம்பத்தில் எதிரும் புதிருமாக இருந்த கதிர் – முல்லை ஜோடிக்கு காதல் மலர்ந்துள்ளது. தற்போது இவர்களுக்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்ப்பவர்கள் அதிகம்.

vijay tv
vijay tv

மேலும் லவ் ஸ்டேட்டஸ் கூட கதிர் முல்லையை வைத்தே வைரலாகிறது. தற்போது நிஜ வாழக்கையிலும் திருமணம் ஆகப் போகும் முல்லைக்கு விஜய் டிவி நலங்கு விழா வைத்து சிறப்பித்தது.

மேலும் சித்ராவிற்கு நடிப்பு திறமை மட்டுமல்ல நடனம் மற்றும் பாட்டு பாடுவது மற்றும் சிலம்பம் சுற்றுவது என பல திறமைகளை தன்னுள் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் ராதை மனதில் என்ற பாடலுக்கு அழகாக நடமாடியுள்ளார். சித்ரா ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ரசித்து கமன்ட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here