உங்க அறிவியல் அறிவுக்கு அளவே இல்லையா..? டெஸ்லா நிறுவனர் குழந்தைக்கு வைத்துள்ள விசித்திர பெயர்..!

0

அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது குழந்தைக்கு வைத்துள்ள பெயர் தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதற்கு அர்த்தம் புரியாமல் அனைவரும் குழம்பிப்போய் இருந்த நிலையில் அவரே அதற்கு விளக்கமும் வழங்கி உள்ளார்.

விசித்திர பெயர்:

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அவருடைய மனைவி கிரீம்ஸ்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு X Æ A-12 என பெயர் சூட்டியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் அம்மாகாண சட்டத்தின் படி குழந்தைகளின் பெயர்களில் கணித குறியீடுகள், எண்களை பயன்படுத்தக் கூடாது. ஆங்கில மொழியில் மட்டுமே பெயர் வைக்க வேண்டும். இதனால் X Æ A-12 பெயரை அங்கீகரித்து பிறப்பு சான்றிதழில் பதிய அரசு மறுத்து விட்டது.

X Æ A-12 விளக்கம்:

இந்த வினோத அறிவியல் பெயருக்கு எலான் மஸ்க் அளித்த விளக்கத்தை பார்த்து நெட்டிசன்கள் வாய்பிளந்து நிற்கின்றனர். X என்பது கணிதத்தில் ‘Unknown Variable’ ஐ குறிக்கும். Æ என்பது செயற்கை நுண்ணறிவையும், A-12 என்பது அமெரிக்க போர் விமானத்தை குறிக்கும். மேலும் ஆர்செங்கல் எனத் தொடங்கும் பாடல் இவரது மனைவிக்கு மிகவும் புடிக்குமாம். எனவே A அதற்கும் பொருந்தும்.

ஏற்கனவே ஐந்து குழந்தைகளுக்கு தந்தை ஆன எலான் மஸ்க் தனது 6 வது ஆண் குழந்தைக்கு X Æ A-12 என விசித்திரமாக பெயர் வைத்துள்ளது இணையவாசிகளால் அதிகளவில் விமர்சனம் செய்யப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here