Friday, May 3, 2024

மேலும் நவீனமயமாகும் மின் கட்டணம் – வீட்டு வாசலிலேயே கட்டலாம்!!

Must Read

மக்கள் சுலபமாக மின்கட்டணத்தை கட்ட வசதியாக டிஜிட்டல் முறை மூலமாக வீட்டு வாசலிலேயே கட்டணம் வசூலிக்க மின்வாரியம் “பாயிண்ட் ஆப் சேல்” என்ற கருவியை மின்ஊழியர்களுக்கு வழங்க உள்ளது. இதன் மூலமாக மின்கட்டணம் செலுத்துவது மேலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய கட்டணம்:

தமிழகத்தில் மின்வாரிய கட்டணத்தை செலுத்த மக்கள் மிகவும் சிரமத்தை சந்திப்பர், வரிசையில் நின்று தான் கட்டவேண்டும். அதே போல் மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கட்டணத்தை உரியவரிடம் இருந்து வசூலிப்பர். இந்த கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும். டிஜிட்டல் முறையில் கூட மின்கட்டணத்தை செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி இருந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

electricty bill collection
electricty bill collection

கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி கூறியதாவது “பாயிண்ட் ஆப் சேல் என்ற கருவி வாயிலாக மக்களிடம் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் முறை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலமாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த பயனடைவர்.”

கடன் தவணை (EMI) செலுத்த ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் – யார் யாருக்கு பொருந்தும்??

“இந்த முறையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற நவீன பணவர்த்தனை செய்யலாம். அதுவும் வீட்டு வாசலிலேயே கட்டணம் வசூலிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

நவீன முறை:

online bill payment
online bill payment

அதே போல் “பாயிண்ட் ஆப் சேல்” என்ற கருவி மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் போதே விரும்புபவர்கள் உடனடியாக பணத்தினை கட்டலாம். ரகசிய குறியீடான QR கோடினை ஸ்கேன் செய்து ஸ்மார்ட்போன் மூலமாக பணத்தினை செலுத்தலாம். இந்த புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக  மக்களே., நாளை  தொடங்கவிருக்கும் அக்னி நட்சத்திரம்.., வானிலை மையம் விடுத்த  எச்சரிக்கை!!

மற்ற கோடை நாட்களை விட அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் அதிகரிக்கும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்ட அடிப்படையான கருத்தாகும். அந்த வகையில் நாளை (மே 4)...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -