கடன் தவணை (EMI) செலுத்த ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் – யார் யாருக்கு பொருந்தும்??

0
SBI
SBI

ஸ்டேட் வங்கியில் (SBI) வீடு மற்றும் பிற சில்லறை கடன் பெற்றவர்கள் அதற்கான தவணைத் தொகையை (EMI) செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

கடன் தவணைத் தொகை:

கொரோனா பாதிப்பு நஷ்டம் ஏற்பட்டதால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. மேலும் தொழில்துறை நிறுவனங்களும் இயங்காத காரணத்தால் பொதுமக்களுக்கு வருமானம் குறைந்தது. இதனால் வங்கிகளில் பெற்ற கடன் தவணைத் தொகையினை செலுத்த கால அவகாசம் வழங்கி மத்திய நிதித்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதனை நீட்டிப்பது குறித்து அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில் ஸ்டேட் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு 2 வருட கால அவகாசம் அளித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி வீட்டு, வாகன மற்றும் பிற அனைத்து கடன் பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்த 2 ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் 2 வருடம் வரை அவகாசம் வழங்க முடியும் என ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருந்து குறிபிடத்தக்கது. ஸ்டேட் வங்கியில் மார்ச் 1ம் தேதிக்கு முன் கடன் பெற்றவர்கள் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். இதற்காக டிசம்பர் 1ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பின்னர் எஸ்பிஐ கிளைக்கு நேரடியாக சென்று கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய போலீஸ் பிரிவில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் – உள்துறை அமைச்சகம் தகவல்!!

இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக 0.35% வட்டி வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. HDFC மற்றும் ICICI வங்கிகளும் விரைவில் இந்த கால அவகாச நீட்டிப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here