சுவையான “முட்டை புலாவ்” ரெசிபி – வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!!

0

சைவ பிரியர்களுக்கு சரி அசைவ பிரியர்களுக்கு சரி அனைவரும் விரும்பி உண்பது முட்டை தான். முட்டையினை வைத்து இன்று ஸ்பெஷல் ரெசிபியான “எக் புலாவ்” குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • பாசுமதி அரிசி – 1/2 கிலோ (சமைத்தது)
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளி – 2
  • இஞ்சி & பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • சீரக தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • நறுக்கிய கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை

முதலில், ஒரு கடாயினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதங்க விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதில் தக்காளி சேர்க்க வேண்டும். ஒரு முறை கிண்டி விட்டு அதில் இஞ்சி & பூண்டு விழுது, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் மிளகாய் பேஸ்ட் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

மணக்க மணக்க கிராமத்து “கோழி கறி குருமா” – செஞ்சு அசத்துங்க!!

நன்றாக கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் உப்பு சேர்க்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்ததும் இதில் முட்டையினை சேர்க்க வேண்டும். நன்றாக மசாலா படும்வரை முட்டையினை கிண்டி விட வேண்டும். முட்டை நன்றாக வெந்ததும் அதில் சமைத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியினை சேர்க்க வேண்டும். மசாலா அனைத்தும் சாதத்தில் படும்வரை கிண்டி விட்டு கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும். அவ்ளோ தான்!!

சுவையான “எக் புலாவ்” ரெசிபி ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here