இந்தியாவில் ஒரே நாளில் 72 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

0
Coronavirus on scientific background

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 45வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் பெருந்தொற்று பரவியது. இதனால் நாடு முழுவதும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இந்திய பொருளாதாரத்திலும் பல சிக்கல் ஏற்பட்டது. இப்படியாக இருக்க, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றில் இருந்து நாடு படிப்படியாக மீண்டு வந்தது. அனைத்து நாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தனர். கொரோனாவிற்காக தடுப்பூசியும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சுவையான “முட்டை புலாவ்” ரெசிபி – வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!!

இந்நிலையில் மீண்டும் கொரோனா இந்தியாவில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இப்போதெல்லாம் யாரும் மாஸ்க் போடுவதும் கிடையாது. சமூக இடைவெளியும் பின்பற்றுவதும் கிடையாது. இதனாலேயே கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்து விட்டது. இன்று ஒரே நாளில் 72,330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,21,655 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 459 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 40,382 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்யாவும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here