அசைவ சுவையில் வீடே மணக்கும் முட்டை ஓமம் குழம்பு… ட்ரை பண்ணி பாருங்க!!!

0

நாம் சாப்பிடும் உணவுகளே நமக்கு மருந்தாக அமைகிறது. அது போல வயிற்றில் ஏற்படும் பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு நம்ம வீட்டு அடுப்படியில் இருக்கும் பெருங்காயம், இஞ்சி, ஓமம் போன்றவை பயன்படுகிறது. தற்போது அது போன்றதொரு குழம்பு வகையை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அதாவது தற்போது முட்டை ஓமம் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்

முட்டை -4

தேங்காய் துருவல் – 1 கப்

மிளகு – 1/4 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 3

மல்லி தூள் – 1 தேக்கரண்டி

கருவேற்பில்லை – சிறிதளவு

பூண்டு – 3

ஓமம் – 1/2 தேக்கரண்டி

புளி தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முட்டை ஓமம் குழம்பு செய்முறை முதலில் ஒரு கடாயில் தேங்காய் துருவல்,மிளகு, மிளகாய் வற்றல், பூண்டு,  கறிவேப்பிலை சேர்ந்து சிவக்க வறுத்து கொள்ள வேண்டும். நல்ல வறுப்பட்டு பிரவுன் கலரில் வரும் தருவாயில் சிறிது ஓமம் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதை நன்கு ஆறவிடவும். இதையடுத்து  வதக்கி வைத்து உள்ள பொருட்களை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

அதன் பிறகு அரைத்த கலவையை அதில் சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும். அதில் தேவையான புளி தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். மேலும் அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்ந்து கொண்டு கலக்கி விடவும். அதன் பின்னர் வேகவைத்த முட்டைகளை அதில் சேர்த்து கொள்ளவும்.இந்த குழம்பு பொங்கி வரும் வேளையில் , அதன் பின்னர் நன்கு கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவும். தற்போது சுவையான அசைவ சுவையை தரக்கூடிய முட்டை ஓமம் குழம்பு ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here