குழந்தைகள் ஆன்லைன் கேம் விளையாட தடை – சீனா விதித்துள்ள நூதன கட்டுப்பாடுகள்!

0
குழந்தைகள் ஆன்லைன் கேம் விளையாட தடை - சீனா விதித்துள்ள நூதன கட்டுப்பாடுகள்!
குழந்தைகள் ஆன்லைன் கேம் விளையாட தடை - சீனா விதித்துள்ள நூதன கட்டுப்பாடுகள்!

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நூதன கட்டுப்பாடுகள் :

உலகில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலால் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனால், குழந்தைகள் கையில் ஆண்ட்ராய்டு போன் போன்ற தகவல் தொழில்நுட்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன. இவர்களுக்கு இது போன்ற சாதனங்கள் கிடைத்துள்ளதால், ஆன்லைன் சார்ந்த வீடியோ கேம்கள் விளையாடுவது தற்போது அதிகரித்துள்ளது. மேலும், இந்த செயல்கள் சமீப காலங்களில் கூடியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

குழந்தைகள் ஆன்லைன் கேம் விளையாட தடை - சீனா விதித்துள்ள நூதன கட்டுப்பாடுகள்!
குழந்தைகள் ஆன்லைன் கேம் விளையாட தடை – சீனா விதித்துள்ள நூதன கட்டுப்பாடுகள்!

இந்த வீடியோ கேம்கள் சார்ந்த விளையாட்டுகளில் உள்ள சிறுவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதும், எப்போதும் செல்போன் போன்ற ஊடங்களை பார்த்து கொண்டே இருப்பதால் உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திப்பதாகவும் குழந்தைகள் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், சமீபத்தில் “ப்ளூவேல்” என்ற விளையாட்டால் பல்வேறு குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்களும் அரங்கேறி வந்தன.

குழந்தைகள் ஆன்லைன் கேம் விளையாட தடை - சீனா விதித்துள்ள நூதன கட்டுப்பாடுகள்!
குழந்தைகள் ஆன்லைன் கேம் விளையாட தடை – சீனா விதித்துள்ள நூதன கட்டுப்பாடுகள்!

இதை தடுக்கும் விதமாக, சீன அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்கள் தெரிவித்துள்ளதாவது, 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இந்த ஆன்லைன் சார்ந்த வீடியோ கேம் விளையாட வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற விளையாட்டுகளை உருவாகியுள்ள நிறுவனங்கள், இதில் விளையாட பதிவு செய்துள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையானவையா என பரிசோதித்து அறிக்கையாக தயார் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த கட்டுப்பாடுகள் உலக நாடுகளுக்கும் விதிக்கப்பட வேண்டும் என்பது குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here