ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் இருந்து விலகும் முக்கிய நபர்.., இனி இவருக்கு பதில் இவர் தான்!!

0
ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் இருந்து விலகும் முக்கிய நபர்.., இனி இவருக்கு பதில் இவர் தான்!!
ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் இருந்து விலகும் முக்கிய நபர்.., இனி இவருக்கு பதில் இவர் தான்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவியா-பார்த்திபன், ஜீவா-பிரியா ஜோடி சேர்வார்களா?? மாட்டார்களா?? என ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது காவியா, பிரியா இருவரும் ஆடி மாதம் என்பதால் அவர்கள் அம்மா வீட்டில் உள்ளனர்.இதில் காவியாவை பார்ப்பதற்காக பார்த்திபன் அவங்க அம்மா வீட்டுக்கு திருட்டுத்தனமாக சென்ற ப்ரோமோ அண்மையில் வெளியானது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காவியாவும் பார்த்திபனும் இணைந்து வாழ் வேண்டும் என்பதற்காகவே ரசிகர்கள் சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த சீரியலில் காவியா, பிரியாவின் தந்தையாக கிருபா கதாபாத்திரத்தில் மனோகர் கிருஷ்ணன் நடித்து வந்தார்.இது தவிர இவர் சுந்தரி சீரியலில் முருகன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியின் “இறைவன்” படத்தின் மாஸ் அப்டேட்.., படு குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்!!

இப்படி ஒரே நேரத்தில் இவர் 2 சீரியல்களில் நடிக்க முடியாததால் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதில் அந்த கேரக்டரில் பிரபல சீரியல் ஆக்டர் பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிய தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர். இனி வரும் எபிசோடுகளில் இவர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here