“work from home” முறை மூலமே வேலை செய்யுங்க.,, சுற்றுச்சூழல் அமைச்சர் வேண்டுகோள்!!

0
"work from home" முறை மூலமே வேலை செய்யுங்க.,, சுற்றுச்சூழல் அமைச்சர் வேண்டுகோள்!!

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் காற்று மாசுபாடு 50%, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக அதிகரிப்பதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் இதை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது மின்சார வாகன பயன்பாட்டை மக்கள் பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் மாநிலத்தில் பட்டாசுகள் வெடிக்க மற்றும் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் இருப்பவர்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவை அரசு மீண்டும் திரும்ப பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் இந்த பணியாளர்களுக்கு மட்டும் ரூ.5000 நிதியுதவி – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

இந்நிலையில் மற்றொரு நடவடிக்கையாக வாகன மாசுபாட்டைக் குறைக்க பொதுமக்கள் work from home முறை மூலம் வேலை செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாமல் மக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களை பயன்படுத்துதை குறைத்து கொண்டு, பகிரப்பட்ட போக்குவரத்தைப் பயன்படுத்தலாம் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here