தமிழகத்தில் குழந்தைகளுக்காக “விதை” திட்டம்.,, தொடங்கி வைத்தார் முதல்வர்!!

0
தமிழகத்தில் குழந்தைகளுக்காக
தமிழகத்தில் குழந்தைகளுக்காக "விதை" திட்டம்.,, தொடங்கி வைத்தார் முதல்வர்!!

சென்னையில் வர்ஷினி இல்ல அறக்கட்டளை சார்பில் விதை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்பித்துள்ளார்.

விதை திட்டம்:

தமிழகத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று வர்ஷினி இல்லம் அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் ‘விதை’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதாவது இந்த திட்டத்தின் கீழ் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த திட்டத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நடமாடும் சிகிச்சை சேவை மைய பேருந்தை முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய அதிகாரிகள் மற்றும் வர்ஷினி அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

“work from home” முறை மூலமே வேலை செய்யுங்க.,, சுற்றுச்சூழல் அமைச்சர் வேண்டுகோள்!!

தமிழகத்தில் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்கள் நலன் கருதி அரசு சார்பில் ஏராளமான உதவி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் முதல்வர் தங்கள் நலனுக்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். இந்த விதை திட்டம் கட்டாயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here