T20 வேர்ல்ட் கப்.., தொடர்ந்து அதிரடி காட்டி வரும் இந்திய வீரர்.., முதலிடம் பிடித்து அசத்தல்!!

0
T20 வேர்ல்ட் கப்.., தொடர்ந்து அதிரடி காட்டி வரும் இந்திய வீரர்.., முதலிடம் பிடித்து அசத்தல்!!
T20 வேர்ல்ட் கப்.., தொடர்ந்து அதிரடி காட்டி வரும் இந்திய வீரர்.., முதலிடம் பிடித்து அசத்தல்!!

2022 T20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

விராட் கோலி:

T20 உலக கோப்பை தொடருக்கான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் 3 வது வீரராக களமிறங்கிய விராட் கோலி வழக்கம்போல் அதிரடி காட்ட தொடங்கினார். இவர் தனது அபார ஆட்டத்தின் மூலம் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில் அவர் அதிக ரன் குவித்ததன் மூலம் இதுவரை நடைபெற்ற உலக கோப்பை தொடரில் மொத்தம் 1017 ரன்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் அவர் உலக கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனே 1,016 ரன்களுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார்.

பாரா பேட்மிண்டனில் அசத்தி வரும் இந்திய வீரர்கள்…, ஆரம்பமே அமர்க்களம்!!

விராட் கோலி கடந்த 2014 (319 ரன்கள்), 2017 (273 ரன்கள்) ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் விராட் கோலி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர டி20 உலகக் கோப்பை தொடரில் 2 முறை தொடர் நாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here